மிரட்ட வரும் லாவா.. ரூ.15,000 பட்ஜெட்ல மீடியாடெக் சிப்செட்.. எப்போது விற்பனை? என்ன மாடல்?
இந்திய மார்கெட்டில் தனியிடம் பிடிக்க முயற்சித்து வரும் லாவா நிறுவனத்துக்கு மிகப்பெரும் நம்பிக்கையாக லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி (Lava Blaze Pro 5G) போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்டுடன் விரைவில் அதிரடியாக களமிறங்குகிறது.
இப்போதைய மார்கெட்டில் பட்ஜெட் மற்றும் மலிவு விலை போன்களுக்கே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்த விலை போன்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டு வருதால், இன்பினிக்ஸ், ஐடெல், போக்கோ போன்ற பல்வேறு நிறுவனங்கள் மலிவு விலை போன்களை போட்டிப் போட்டுக்கொண்டு களமிறங்கி வருகின்றன.

இந்த போட்டியின் காரணமாக நல்ல நல்ல அம்சங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. இதனால், ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கிடைத்துவிடுகின்றன. இதற்கு லாவா நிறுவனமும் விதிவிலக்கல்ல. அந்த நிறுவனம் மலிவான பட்ஜெட்டில் போன்களை களமிறக்கு தனக்கென தனியிடம் பிடித்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.
சமீப காலமாக, அந்த நிறுவனத்தின் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போன் விரைவில அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எஸ்ஓசி (MediaTek Dimensity 6020 SoC) என்னும் 5ஜி சிப்செட் வருவதால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த போன் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள் அடுதடுத்து வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில், லாவா பிளேஸ் ப்ரோ போனின் அம்சங்களை தெரிந்துகொள்வோம்.
லாவா பிளேஸ் ப்ரோ அம்சங்கள் (Lava Blaze Pro Specifications): இந்த போன் 6.51 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) 2.5டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 12என்எம் (Octa Core MediaTek Helio G37 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த லாவா போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட ஒரே மாடலில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 256 ஜிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோ எஸ்டி சிலாட் இடம் பெற்றுள்ளது.
இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லாவா போனில் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint scanner) வருகிறது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எப்எம் ரோடியோ (FM Radio) சப்போர்ட் வருகிறது. மேலும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த போன் கிளாஸ் கோல்டு (Glass Gold), கிளாஸ் க்ரீன் (Glass Green), கிளாஸ் ப்ளூ (Glass Blue) மற்றும் கிளாஸ் ஆரஞ்ச் (Glass Orange) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Image Source: X/ Abhishek Yadav


Click it and Unblock the Notifications