Home
Mobile

வெயிட்டிங் லிஸ்ட்டில் கோடி மக்கள்.. தேதி குறிச்சாச்சு.. Dimensity 6020 சிப்செட்.. கம்மி விலை.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் தனது லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் செப்டம்பர் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த லாவா 5ஜி போன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் இந்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போன் ஆனது 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனின் ரியர் கேமரா சென்சார்கள் பின் பேனலில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

தேதி குறிச்சாச்சு.. Dimensity 6020 சிப்செட்.. கம்மி விலை.. எந்த மாடல்?

குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இது சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போன் பிளாக் (Black) மற்றும் ஆஃப்-ஒயிட் ஷேட் (Off-White shade) நிறங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோபோன், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் முழு அம்சங்களும் தெரியவரும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்த லாவா பிளேஸ் 2 ப்ரோ 4ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் (Android 12 Out-of-box) இயங்குகிறது. மேலும் இது 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 2.5டி கர்வ்டு டிஸ்பிளே, செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் இந்த போன் டூயல்-சிம் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் யூனிசாக் டி616 ப்ராசஸர் (Octa-core Unisoc T616 processor) மூலம் இயக்கப்படும் லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவையும் கொண்டுள்ளது.

தேதி குறிச்சாச்சு.. Dimensity 6020 சிப்செட்.. கம்மி விலை.. எந்த மாடல்?

இந்த ஸ்மார்ட்போனில் மெமரி ஃப்யூஷன் என்கிற தொழில்நுட்பமும் (Memory Fusion Technology) உள்ளது. இதைப் பயன்படுத்தி 8ஜிபி என்கிற வழக்கமான ரேம் உடன் கூடுதலாக 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) சேர்க்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் இரண்டு 2-மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த லாவா ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மொத்தம் 190 கிராம் எடையை கொண்டுள்ள இந்த லாவா ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை (Finger Print Sensor) கொண்டுள்ளது கூடவே ஃபேஸ் அன்லாக்கையும் (Face Unlock) ஆதரிக்கிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. அதேபோல் விரைவில் லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்போன் ஆனது குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Pro 5G will launch in India on September 26 at a low price: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X