Home
Mobile

அசத்தலான 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்.. Dimensity 6020 சிப்செட், ரூ.15,000 க்கு கீழ்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் சமீபத்தில் லாவா பிளேஸ் 2 ப்ரோ என்ற 4ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனையும் விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்.. எந்த மாடல்?

குறிப்பாக லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு கீழ் இந்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே தெரியவந்துள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த லாவா பிளேஸ் 2 ப்ரோ அம்சங்களைப் பார்ப்போம்.

லாவா பிளேஸ் 2 ப்ரோ அம்சங்கள்: ஆக்டா-கோர் யூனிசாக் டி616 ப்ராசஸர் (Octa-core Unisoc T616 processor) மூலம் இயக்கப்படும் லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இதை நம்பி வாங்கலாம்.

லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் (Android 12 Out-of-box) இயங்குகிறது. மேலும் இது 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 2.5டி கர்வ்டு டிஸ்பிளே, செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் இந்த போன் டூயல்-சிம் ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மெமரி ஃப்யூஷன் என்கிற தொழில்நுட்பமும் (Memory Fusion Technology) உள்ளது. இதை பயன்படுத்தி 8ஜிபி என்கிற வழக்கமான ரேம் உடன் கூடுதலாக 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) சேர்க்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் இரண்டு 2-மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த லாவா ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

அசத்தலான 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்.. எந்த மாடல்?

4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மொத்தம் 190 கிராம் எடையை கொண்டுள்ள இந்த லாவா ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை (Finger Print Sensor) கொண்டுள்ளது; கூடவே ஃபேஸ் அன்லாக்கையும் (Face Unlock) ஆதரிக்கிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. லாவா பிளேஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையைப் பொறுத்தவரை, இது சரியாக எந்த தேதியில், எந்த இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்கிற விவரங்களை லாவா நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. விரைவில் இந்த போனின் விற்பனை விவரங்கள் தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Pro 5G will be launched in India by the end of September: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X