அக்.3 அதிரும்.. வெறும் ரூ.12,499க்கு 16GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் வியக்கும்படியான விலையில் 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடனும், பிரீமியம் டிசைனுடனும் லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி (Lava Blaze Pro 5G) போன் விற்பனைக்கு வருகிறது.
லாவா பிளேஸ் ப்ரோ அம்சங்கள் (Lava Blaze Pro Specifications): இதுவொரு 5ஜி மாடலாகும். இந்த போனில் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.5 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது.

இந்த லாவா போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் எச்டி (HD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த மெயின் கேமராவில் ஃபிலிம், ஸ்லோவ் மோஷன், டைம் லேப்ஸ், பியூட்டி, எச்டிஆர், நைட், போர்ட்ராய்டு போன்ற பல்வேறு மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.
இந்த லாவா பிளேஸ் ப்ரோ மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 78 நிமிடங்கள் போதுமானதாகும். இந்த பேட்டரி 30 மணி நேர டாக்டைம் பேக்கப் மற்றும் 510 நிமிடங்கள் வீடியோ பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது.
இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.10 (Bluetooth 5.10) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.
இந்த லாவா மாடல் ஸ்டார்ரி நைட் (Starry Night) மற்றும் ரேடியண்ட் பேர்ல் (Radiant Pearl) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை மிகவும் மலிவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.12,499க்கு வாங்கிக்கொள்ளலாம்.
அமேசான் (Amazon), லாவா இந்தியா (Lava India) மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். அதோடு பேங்க் ஆஃபர்களும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மிகவும் மலிவான விலைக்கு 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற நல்ல அம்சங்கள் கொண்ட இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








