ஆர்டர் பொளக்குது.. வெறும் ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
வெறும் ரூ.15000 பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷனுடன் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் 64 எம்பி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 7025 சிப்செட்டுடன் வெளியான லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கி இருக்கிறது. டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கும் இந்த லாவா போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனை இப்போது அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 128 மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,499ஆகவும் இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.16,999-க்கு வருகிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் மாடல் ரூ.17,999 பட்ஜெட்டில் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, அறிமுக சலுகையிலும் ரூ.2000 கம்மியாக கொடுத்து ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ரூ.14,999 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் மாடலை வாங்கி கொள்ள முடியும்.
அதேபோல ரூ.15,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் மாடல் ஆர்டருக்கு கிடைக்கும். இந்த பட்ஜெட் மிகவும் அடிமட்ட விலையாகும். ஏனென்றால், இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனில் 3டி கர்வ்ட் அமோலெட் பேனல் கொண்ட மெயின் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேக் கேமரா சிஸ்டத்துடன் செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.
லாவா பிளேஸ் டூயோ 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 5G Specification): இந்த லாவா போன் பிரீமியம் டிசைன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும். பேக் பேனலில் டூயல் ரியர் கேமராவுடன் 1.58 இன்ச் (228 x 460 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவும் பேக் செய்யப்பட்டுள்ளது. இது நோட்டிபிக்கேஷன்களுக்காகவும், கேமராவுக்காகவும் வருகிறது.
அதாவது, ஆப் நோட்டிபிகேஷன்களை இந்த செகண்டரி டிஸ்பிளே மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், பேக் கேமராவில் போட்டோ எடுக்கும்போது, செகண்டரி டிஸ்பிளேவில் ஃபிரேம் பார்த்து எடுத்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் இது புது டிசைன் அனுபவம் கொடுக்கிறது. இப்போது, மெயின் டிஸ்பிளே பீச்சர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொடுக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் பர்ஃபாமென்ஸ் மிரட்டலாக இருக்கிறது. ஏனென்றால், 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 எஸ்ஓசி (6nm Octa Core MediaTek Dimensity 7025 SoC) சிப்செட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைத்திருக்கிறது. இந்த டியோ போனில் IP64 டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மெயின் கேமராவில் சோனி சென்சார் (SONY Sensor) வருகிறது. 33W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள, டால்பி அட்மோஸ் கிடைக்கிறது. ஆர்டிக் ஒயிட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








