Home
Mobile

தீபாவளி ஆஃபர்னா இப்படி இருக்கனும்.. ரூ.14,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

லாவா மொபைல்ஸ் (Lava Mobile) நிறுவனத்தின் லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) ஸ்மார்ட்போனானது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கூடுதலாக பேங்க் தள்ளுபடி போக கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 5000mAh பேட்டரி, 64 எம்பி கேமரா, மட்டுமல்லாமல், 33 ஃபாஸ்ட் சார்ஜிங், 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த பிளேஸ் டூயோ 5ஜி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் எம்ஆர்பி ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் எம்ஆர்பி ரூ.18,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது அமோசான் தளத்தில் 6 ஜிபி ரேம் மாடலானது ரூ.14,779 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,049 பட்ஜெட்டில் வாங்கலாம்.

தீபாவளி ஆஃபர்னா இப்படி இருக்கனும்.. ரூ.14,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே!

லாவா பிளேஸ் டூயோ 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 5G Specification): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் வருகிறது.

இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. டிஸ்பிளே பிரீமியம் மாடல்களுக்கு நிகராக கிடைக்கிறது. ஏனென்றால், மெயின் டிஸ்பிளே மற்றும் பேக்கில் மினி டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மெயின் டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. அதேபோல 1.58 (228 x 460 பிக்சல்கள்) பேக் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இதில் 336 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இதை செல்பீக்கு பயன்படுத்தலாம். நேட்டிபிகேஷன்களை பார்க்கலாம்.

சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. ஃபிளாஷ் மற்றும் எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.

இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போனில் 33W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த லித்தியன்-அயன் பேட்டரி மூலம் 600 நிமிடங்களுக்கு யூடியூப் பிளே பேக் பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரியுடன் 8.45 எம்எம் தடிமன் மற்றும் 186 கிராம் எடை கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆர்டிக் ஒயிட் (Arctic White), செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) ஆகிய 2 கலர் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டிலும் டூயல் டிஸ்பிளே கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Blaze Duo 5G With 64MP Camera Available Under Rs 15000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X