யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதபடி மீடியாடெக் டைமன்சிட்டி 7024 சிப்செட், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 1.58 இன்ச் செகண்டரி டிஸ்பிளேவுடன் லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமல்ல பட்ஜெட்டிலும் பின்னிப்பெடல் எடுத்து இருக்கிறது. இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனின் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.
பட்ஜெட்டில் மெயின் மற்றும் செகண்டரி டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி இருக்கிறது. பிரீமியம் மேட் பினிஷிங் டிசைனில் லாவா பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் டூயோ 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 5G Specification): 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. ரியர் கேமராவுடன் 1.58 (228 x 460 பிக்சல்கள்) செகண்டரி அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 336 பிபிஐ டென்சிட்டி வருகிறது. இந்த டிஸ்பிளே மூலம் ரியர் கேமராவில் செல்பீ எடுத்து கொள்ளலாம். காலிங் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். மியூசிக் கன்ட்ரோல் கிடைக்கிறது.
மேலும், டயல் செலக்சன், பேட்டரி ஸ்டேட்டஸ் மற்றும் டைமர் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனில் சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவானது, ஃபிளாஷ் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது. டூயல் வியூ வீடியோ (Dual View Video) பீச்சர் இருக்கிறது.
மேலும், நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ஏஐ (AI) மற்றும் ப்ரோ (Pro) கேமரா மோட்கள் வருகின்றன. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேட் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டு வேரியண்ட்களிலும் 128 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இல்லை.
33W சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. 79 நிமிடங்களில் 0-100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபுல் சார்ஜ் செய்த பிறகு 471 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை பேக்கப் கிடைக்கும். இந்த லாவாவில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் டைப்-சி ஆடியோ போர்ட் கிடைக்கிறது.
கர்வ்ட் டிஸ்பிளேவில் வெளியாகி இருந்தும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி போன் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (MediaTek Dimensity 7025) சிப்செட் உள்ளது.
இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமேசான் தளத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ஆர்டிக் ஒயிட் (Arctic White), செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) கலரில் கிடைக்க இருக்கிறது. 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. ரூ.2000 டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








