Home
Mobile

ரியல்மி எல்லாம் ஓரம் போ! சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது LAVA போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் அடுத்து லாவா பிளேஸ் டூவோ 3 (Lava Blaze Duo 3) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும்.

இந்நிலையில் லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி எல்லாம் ஓரம் போ!  வருகிறது புது LAVA போன்.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் டூவோ 3 அம்சங்கள் (Lava Blaze Duo 3 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் (MediaTek Dimensity 7060 chipset) உடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் புதிய லாவா போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

50எம்பி Sony IMX752 மெயின் ரியர் கேமரா உடன் லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி எல்லாம் ஓரம் போ!  வருகிறது புது LAVA போன்.. எந்த மாடல்?

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா பிளேஸ் டூவோ 3 போன் அறிமுகமாகும். மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி உடன் இந்த லாவா பிளேஸ் டூவோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 181 கிராம் ஆகும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.15,000-க்கு கீழ் இந்த போன் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி போன்களுக்கு போட்டியாக இந்த புதிய லாவா போன் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Duo 3 specifications and price leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X