Home
Mobile

புது போன் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஜன.19-ல் களமிறங்கும் புது LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் ஜனவரி 19-ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான லாவா பிளேஸ் டூயோ 3 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

லாவா பிளேஸ் டூயோ 3 அம்சங்கள் (Lava Blaze Duo 3 Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் சிறிய 1.6-இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளேவும் இருக்கிறது.

புது போன் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் (MediaTek Dimensity 7060 chipset)உடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக 50எம்பி ரியர் கேமரா லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு வழங்கப்படும்.

லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போன் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

மேலும் 5000mAh பேட்டரி உடன் லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமகாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

லாவா பிளேஸ் டூயோ 3 ஸ்மார்ட்போனின் எடை 181 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா பிளேஸ் டூயோ 3 போன் கம்மி விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Duo 3 India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X