ஒத்த போனுக்கு மொத்த மார்கெட் காலி.. பட்ஜெட்ல LAVA 5G போன்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
லாவா நிறுவனத்தின் புதிய மாடலான லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி (Lava Blaze Duo 3 5G) ஸ்மார்ட்போனில் டூயல் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. கேமரா, சிப்செட், ஓஎஸ் உள்ளிட்ட விவரங்களும் தெரியவந்துள்ளது. இந்த லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டூயல் டிஸ்பிளே கொண்ட மாடலாக லாவா பிளோஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமானது. பட்ஜெட்டில் கிடைக்கும் டூயல் அமோலெட் டிஸ்பிளே மாடலாக இருந்ததால், நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த டூயல் டிஸ்பிளே மாடல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் மாதத்தில் அதுகுறித்த அறிவிப்பைகூட லாவா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இந்த ஜனவரி மாதத்தில் அறிவிப்பு மட்டுமல்லாமல், டிசைன் விவரங்களுடன் லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதை உறுதி செய்துள்ளது. பேக் கேமராவுடன் 1.6 இன்ச் செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது.
நோட்டிபிகேஷன், டைமர், ரியர் கேமரா செல்பீ பீச்சர்களை இந்த செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கொடுக்க உள்ளது. மேலும், 50 எம்பி மெயின் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்திட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7060 6nm) சிப்செட்டை இந்த லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
மேலும், 120 Hz மெயின் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க உள்ளது. பிளாக் (Black) கலரில் வெளியாக உள்ளது. டிசைனை பொறுத்தவரையில் பிளாட் அமோலெட் டிஸ்பிளே டிசைனில் கிடைக்க உள்ளது. ஆனால், லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போனில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. இந்த போனின் பட்ஜெட்டை பார்க்க முந்தைய மாடலை பார்க்க வேண்டும்.
லாவா பிளேஸ் டூயோ 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட்டை இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே இதில் கிடைக்கிறது. புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1.58 இன்ச் (228 x 460 பிக்சல்கள்) செகண்டரி அமோலெட் டிஸ்பிளேவை இந்த லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சார் கிடைக்கிறது. 2 எம்பி செகண்டரி கேமராவை கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. IP64 ரேட்ங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி மாடல் ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








