அடுத்த Lava 5ஜி போன் ரெடி.. AMOLED டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் அடுத்து லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி (Lava Blaze Duo 3 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் டீசர் சமீபத்தில் வெளியானது. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 3 5G Specifications): 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் சிறிய 1.6-இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளேவும் இருக்கிறது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் (MediaTek Dimensity 7060 chipset)உடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி ரியர் கேமரா லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு வழங்கப்படும்.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
5000mAh பேட்டரி உடன் லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமகாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








