LAVA-வின் புதிய டிராகன் போன்.. ரூ.10000 க்கு 50MP கேமரா, 5000mAh பேட்டரி, SD 4 Gen 2 சிப், ஆண்ட்ராய்டு 15!
லாவா (LAVA) நிறுவனம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி அன்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அது லாவா பிளேஸ் டிராகன் (Lava Blaze Dragon) ஸ்மார்ட்போன் ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரங்களை லாவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலை வரம்பும் லீக் ஆகியுள்ளது
லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டால் (Qualcomm Snapdragon 4 Gen 2 chipset) இயக்கப்படும் என்பதை லாவா நிறுவனம் ஒரு எக்ஸ் பதிவின் வழியாக உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்த போஸ்ட்டில் இணைக்கப்பட்டுள்ள லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போனின் புகைப்படம் வழியாக - ஸ்பீக்கர் கிரில்ஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்ட பாட்டம் எட்ஜை பார்க்க முடிகிறது.

லாவா பிளேஸ் டிராகனின் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் கோல்ட் கலர் ஆப்ஷனில் கிடைக்கும் என்பதை காட்டுகின்றன. மேலும் அந்த ரெண்டர்களின் வழியாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) இடம்பெறும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
இதில் ஏஐ ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது எல்இடி பிளாஷ் யூனிட் உடனான ஒரு டேப்லெட் வடிவத்தில் இருக்கிறது. சமீபத்தில் பிளேஸ் டிராகன் மாடலின் லீக் புகைப்படம் ஒன்று வானவில் நிறத்திலான ரியர் கேமரா செட்டப்பை வெளிப்படுத்தி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் ஆனது 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் என்று பிற லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்பீ கேமராவை பொறுத்தவரை இது 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை பேக் செய்யலாம்
ஸ்டோரேஜை பொறுத்தவரை லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் ஆனது 128GB UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை ஆதரிக்கலாம். இது 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என 2 வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) ஒரு எக்ஸ் பதிவின் வழியாக, வரவிருக்கும் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போனின் விலை விவரத்தை லீக் செய்து உள்ளார். அவருடைய கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 10,000 க்கும் குறைவாக விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.
லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 25 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். அதை தொடர்ந்து (அறிவிக்கப்படும் தேதியில்) பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும்.
மிகவும் சமீபத்தில் தான் இந்நிறுவனம் லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி (Lava Blaze AMOLED 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போனை தனது வலைத்தளத்தில் "லிஸ்டிங்" செய்திருந்தது. ஆனால் விலை, விற்பனை குறித்த விவரங்கள் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் - அமோஎல்இடி டிஸ்பிளே கொண்ட மிகவும் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களில் (Affordable 5G smartphone with AMOLED display) ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது லாவா பிளேஸ் டிராகன் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








