Home
Mobile

ஜூலை 25-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. அமேசான் சேல் உறுதி.. LAVA பிளேஸ் டிராகன் 5G மாடல் வருது?

இந்தியாவில் பட்ஜெட் விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறங்கி வரும் உள்நாட்டு நிறுவனமான லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) இப்போது அடுத்த மாடலுக்கு ரெடியாகிவிட்டது. ஜூலை 25ஆம் தேதி லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) போனை களமிறக்க இருக்கிறது. பிளேஸ் சீரிஸ் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், இந்த போனின் பட்ஜெட்டும் அப்படியே இருக்கும் என்பது தெரிகிறது. இந்த புது லாவா போனின் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

அமேசான் (Amazon) தளத்தில் இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனுக்கு மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பீச்சர்கள் குறிப்பிடவில்லை. வெளியீட்டு தேதி மற்றும் அதிகாரப்பூர்வ டிசைன் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஜூலை 25ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிறது. அமேசானிலேயே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஜூலை 25-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. அமேசான் சேல்!

50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் செட்டப் உள்ளது. டைட்டானியம் கலர் கொடுக்கிறது. இதை தவிர வேறு எந்த விவரங்களையும் லாவா நிறுவனம் உறுதி செய்யவில்லை. இருப்பினும், மார்கெட்டில் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. அந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது அதிகாரப்பூர்வமானவை கிடையாது.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): இந்த போனில் பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்க இருக்கிறது. 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. டைட்டானியம் கலர் மட்டுமல்லாமல், பிளாக் கலரும் இருக்கிறது.

இவை மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. முன்னதாக லாவா பிளேஸ் அமோலெட் 5ஜி (Lava Blaze AMOLED 5G) போன் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. எப்போது வெளியாகும் என்ற தேதி உறுதியாகிவில்லை. ஆனால், ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டன. ஆகவே, இதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். இது 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுக்கிறது.

ஜூலை 25-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. அமேசான் சேல்!

லாவா பிளேஸ் அமோலெட் 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 5G Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 6.67 இன்ச் (1080 x 2400) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

மேலும், 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டூயல் வீடியோ, நைட் போர்ட்ராய்டு போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

இந்த லாவா பிளேஸ் அமோலெட் 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமான பீச்சர்களாகும். இதற்கும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், 4 ஜிபி ரேம் வேரியண்ட் வருவதால், ரூ.10,000 மற்றும் ரூ.12,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Dragon 5G With 50MP Camera To Launch India on July 24 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X