Home
Mobile

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.8,999 போதும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

2025ஆம் ஆண்டுக்கான அமேசான் ஃப்ரீடம் சேலில் (Amazon Freedom Sale) 5000mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைன் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி, ரெட்மி, போகோ மற்றும் ஐடெல் போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் அதே டிசைன் மற்றும் பீச்சர்களுடன் இந்தியாவின் லாவா நிறுவனமும் பட்ஜெட் மாடல்களை களமிறக்கி வருகிறது. இதில் பிளேஸ் சீரிஸ் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த வரிசையில் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி சேர்ந்தது.

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.8,999 போதும்.. 5000mAh பேட்டரி.. மாடல்?

இந்திய மார்கெட்டில் ஜூலை 25ஆம் தேதி வெளியாகியது. ஆனால், அதன் விற்பனை ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது, அந்த தேதியில் அமேசான் ஃப்ரீடம் சேல் தொடங்கி இருப்பதால், அடிமட்ட பட்ஜெட்டிலும் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மார்கெட் விலையில் இருந்து ரூ.1,000 கம்மியான வாங்கி கொள்ள முடியும்.

அதாவது, இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இதன் விலை ரூ.9,999ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.8,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் நடக்கும் ஃப்ரீடம் சேலில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த ரூ.1,000 பேக்ங் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், உங்களுக்கு ரூ.1,250 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.9,499 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் வாங்கி கொள்ளலாம்.

இவ்வளவு கம்மியான விலையாக இருப்பதால், பீச்சர்கள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இதில் சிப்செட்டே பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் 5ஜி அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொடுத்து இருக்கிறது. லேட்டஸ்ட் ஓஎஸ் கிடைக்கிறது.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆனால், 90Hz எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து இருக்கிறது. மேலும், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். பஞ்ச்-ஹோல் டிசைன் கிடையாது, வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைப்பதால், யுஐ பிரீமியம் பீல் கொடுக்கும். 50 எம்பி ஏஐ மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு செகண்டரி லென்ஸ் மற்றும் எல்இடி பிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. ஆனால், ஆடியோவுக்கு 3.5 எம்எம் ஜாக் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடையாது, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ போன்ற கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், ப்ளூடூத் 5.4 மற்றும் வை-பை 802 சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Dragon 5G With 50MP Camera Available For Rs Rs 8999 in Amazon Freedom Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X