Home
Mobile

2 நாளுக்கு அப்புறம் இதுதான்.. ரூ.10,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட லாவா நிறுவனத்தின் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) போனின் முழு பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரீமியம் லுக் கொடுப்பது மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களிலும் பட்ஜெட்டுக்கு மேலாக பேக் செய்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் (Amazon) தளத்தில் வெளியான போஸ்டரில் ஜூலை 25ஆம் தேதி இந்த பிளேஸ் டிராகன் 5ஜி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டது. அதன்பிறகு டிசைன் விவரங்கள் மற்றும் சிப்செட் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டால், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற அனைத்து பீச்சர்களும் அமேசான் (Amazon) தளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

2 நாளுக்கு அப்புறம் இதுதான்.. ரூ.10,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி!

அதேபோல கலர் விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் குளோசி டிசைனில் கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் மிட்நைட் மிஸ்ட் (Midnight Mist) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் மெட்டாலிக்-கோட்டிங் மிடில் ஃபிரேம் கிடைக்க இருக்கிறது. வாட்டர்-டிராப் நாட்ஜ் டிஸ்பிளே உள்ளது.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2.5டி டிஸ்பிளே டிசைன் கொண்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம், இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் கிடைக்கிறது. முக்கிய பீச்சராக லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்துள்ளது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) உள்ளது.

2 நாளுக்கு அப்புறம் இதுதான்.. ரூ.10,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி!

இந்த போனில் யுனிசோக் சிப்செட் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேஜர் 5ஜி பேண்ட்களின் சப்போர்ட் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கிடைத்து இருக்கிறது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்க இருக்கிறது.

இந்த கேமராவில் ஏஐ மோட், எச்டிஆர் மோட், போர்ட்ராய்டு மோட், பியூட்டி மோட், பனோரமா மோட், ஸ்லோவ் மோஷன், டைம் லேப்ஸ் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக நைட் மோட், 50 எம்பி மோட், ப்ரோ மோட் மற்றும் டாக்குமெண்ட் போன்ற பீச்சர்களையும் இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. ஆகவே, கேமராவில் பக்காவாகவே இருக்கிறது.

மேற்கண்ட அனைத்து பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை. ஆகவே, இதே பீச்சர்களுடன் ஜூலை 25ஆம் தேதி இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போன் வெளியாக இருக்கிறது. பட்ஜெட் விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Dragon 5G With 50MP Camera 4GB RAM To Launch July 25 India Check Confirmed Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X