Home
Mobile

ஒத்துங்க.. மொத்தமா ஒத்துங்க.. ரூ.7,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Blaze Dragon 5G) ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கிடைக்கிறது. மலிவான விலையில் 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையே மலிவாக இருப்பதால், விற்பனையில் மிரளவிட்டது. இதை மேலும் சூடுபிடிக்க வைக்கும்படி அமேசான் தளத்தில் ரூ.1,999.90 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

ஒத்துங்க.. மொத்தமா ஒத்துங்க.. ரூ.7,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh!

ஆகவே, இதுவரையில் கிடைக்காதபடி ரூ.7,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், இந்த பேங்க் தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும், பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.9,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.

ஆகவே, 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை பெற்று கொள்ளலாம். அதேபோல 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பதே பெரிய விஷயமாகும். ஆனால், இதில் கூடுதலாக 1 ஜெனரேஷன் அப்டேட் கிடைக்கிறது. 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மட்டுமல்லாமல், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டும் கிடைக்கிறது. ஆனால், கேமரா பிரியர்கள் விரும்பும்படி நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. மேலும், பியூட்டி மோட் (Beauty Mode) போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) பெற்று கொள்ளலாம். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளன.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), 5ஜி (5G) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), வை-பை 801 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் மிட்நைட் மிஸ்ட் (Midnight Mist) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Lava Blaze Dragon 5G With 4GB RAM Available At Discounted Price in Amazon Offer Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X