Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,989 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த லாவா போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1612 x 720 பிக்சல்கள், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ,16.7 மில்லியன் கலர் டெப்த், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டிஉள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆணட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொண்டுள்ளது லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் பியூட்டி மோட் (Beauty Mode) உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் மூலம் 1080P வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி வசதியுடன் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), வை-பை 801 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனில் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பேக் செய்யப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
LAVA Blaze Dragon 5G with 4GB RAM available at 30 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X