ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.8,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. LAVA பிளேஸ் டிராகன் அறிமுகம்!
இந்திய மார்கெட்டில் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) போன் வெளியாகி இருக்கிறது. 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் சிப்செட் கொடுக்கும் இந்த மாடலானது அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி, ரெட்மி, ஐடெல் மற்றும் இன்பினிக்ஸ் நிறுவனங்களுக்கு நிகராக டிசைன் மற்றும் பீச்சர்களுடன் இந்தியாவின் லாவா நிறுவனமும் பட்ஜெட் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. கர்வ்ட் டிஸ்பிளே, அவுட்டர் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட் விலையிலான போன்களில் கொடுத்து தனியிடம் பிடித்து வருகிறது.

இப்போது, பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களை தட்டித்தூக்கும்படி லாவா பிளேஸ் டிராகன் 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. கேமரா, சிப்செட் மற்றும் ஓஎஸ் ஆகியவற்றில் பட்ஜெட்டுக்கு ஏற்ப பேக் செய்துள்ளது. டிசைனும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி?
லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த சிப்செட் மூலம் பெரும்பாலான 5ஜி பேண்ட்கள் வருகின்றன.
ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் யுஐ எதிர்பார்க்க முடிகிறது. ஆனால், ஓஎஸ் அப்டேட் விவரங்கள் கொடுக்கப்படவில்லை. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு வேரியண்ட் வெளியாகி இருக்கிறது.

இதற்கு மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் பட்ஜெட்டுக்கு ஏற்ப 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
50 எம்பி ஏஐ மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஏஐ மோட், எச்டிஆர் மோட், போர்டார்ய்டு மோட் போன்ற பீச்சர்களை இந்த கேமரா கொடுக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கிறது.
இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனை கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் மிட்நைட் மிஸ்ட் (Midnight Mist) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, ரூ.8,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








