ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.17249 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, ஆண்ட்ராய்டு 15 அப்கிரேட், 5000mAh பேட்டரி, 16ஜிபி ரேம், 33W சார்ஜிங் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட லாவா பிளேஸ் கர்வ் (Lava Blaze Curve) மாடலானது கிடைக்காத தள்ளுபடிக்கு வருகிறது.
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) பல்வேறு மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த விற்பனையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும் பட்ஜெட்டுக்கு லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போன் வருகிறது.

லாவா பிளேஸ் கர்வ் அம்சங்கள் (Lava Blaze Curve Specifications): இந்த லாவா போனில் சோனி சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது.
இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ மோட் (AI Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்யூட்டி மோட் (Beauty Mode), நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதே பீச்சர்களுடன் 32 எம்பி செல்பீ வருகிறது. ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அப்கிரேட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. மாலி கிராபிக்ஸ் வருவதால், மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

இந்த லாவா பிளேஸ் கர்வ் மாடலானது, 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பேனல் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.
இந்த லாவாவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு வருகின்றன. எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த இந்த லாவா பிளேஸ் கர்வ் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டுள்ளது.
இந்த லாவாவில் அயர்ன் கிளாஸ் (Iron Glass) மற்றும் விரிடியன் கிளாஸ் (Viridian Glass) ஆகிய 2 கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் உள்ளது.
இப்போது, அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை முன்னிட்டு ரூ.17,050 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.750 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெற ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். ஆகவே, இந்த போனை ரூ.17,249 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








