Home
Mobile

கதிகலங்கும் சீன நிறுவனங்கள்.. 256GB மெமரி.. 64MP கேமரா.. வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

சின நிறுவனங்களின் மொபைல் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் புதிய மொபைல் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம்.

அதாவது இந்திய மொபைல் நிறுவனமான லாவா விரைவில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 5-ம் ( March 5) தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போனின் விலை வெளியாகி உள்ளது.

கதிகலங்கும் சீன நிறுவனங்கள்.. 256GB மெமரி.. வருகிறது புதிய 5ஜி போன்..

அதன்படி லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Curve 5G specifications): லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வீடியோஎடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமலி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.6-இன்ச் கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். இதன் கர்வ்டு டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

கதிகலங்கும் சீன நிறுவனங்கள்.. 256GB மெமரி.. வருகிறது புதிய 5ஜி போன்..

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Curve 5G price leaked ahead of March 5 launch: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X