சீன 5G Phone-களுக்கு சங்கு.. கதிகலக்கும் இந்திய நிறுவனம்.. கனவு விலையில் கர்வ்டு டிஸ்பிள, 8GB ரேம், 64MP கேம்!
மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே காணப்படும் கர்வ்டு டிஸ்பிளேவை, பட்ஜெட் விலையில் களமிறக்குவதோடு மட்டுமின்றி.. அதில் 5ஜி ஆதரவு, 8ஜிபி ரேம், 64எம்பி கேமராவையும் சேர்த்து.. பெரும்பாலான சீன 5ஜி போன்களுக்கு வேட்டு வைத்துள்ளது, இந்திய மொபைல் நிறுவனமான லாவா!
நாம் இங்கே பேசுவது லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) மாடலை பற்றித்தான். வருகிற மார்ச் 5 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டு, அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வரவுள்ள இந்த லாவா மாடலின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனானது மார்ச் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எக்ஸ் (X) தளம் வழியாக லாவா நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் போஸ்டர் புகைப்படத்தின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் (Triple rear camera unit) மற்றும் கவ்ர்டு ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே (Curved hole-punch display) இடம்பெறுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
அதாவது லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனில் கர்வ்டு டிஸ்பிளே இடம்பெறும் மற்றும் செல்பீ கேமராவை வைக்க டிஸ்பிளேவில் மேல்பக்கத்தில் சென்டர்-ஹோல் பஞ்ச் ஸ்லாட்டை (Centred-hole punch slot) ஒன்றும் இருக்கும். ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பொறுத்தவரை, அது பேக் பேனலின் மேல் இடது மூலையில் சிறிய வட்ட வடிவிலான எல்இடி ஃபிளாஷ் யூனிட் (LED Flash Unit) உடன், மூன்று தனித்தனியான, மற்றும் சற்றே உயர்த்தப்பட்ட சர்க்கிள் யூனிட்களாக உள்ளன.

மெயின் கேமராவாக 64எம்பி சென்சார் இருக்கும் என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள இரண்டு கேமராக்களை பற்றிய விவரங்கள் வெளியீட்டு தேதி அன்று அறிவிக்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில், லாவா வெளியிட்டுள்ள அனைத்து டீஸர்களிலும், பளபளப்பான ஃபினிஷ் உடன் அடர் பச்சை நிறத்திலான (Dark green shade with a glossy finish) லாவா பிளேஸ் கர்வ் 5ஜி மாடலை காணமுடிகிறது.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) இயக்கப்படும் என்றும், இது யுஎப்எஸ் 3.1 ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (UFS 3.1 onboard storage) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கர்வ்டு டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) ஆதரவையும் எதிர்பார்க்கலாம்.

என்ன விலைக்கு வரும்? லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது: 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். விலையை பொறுத்தவரை இது ரூ.16,000 - ரூ. 19,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது லாவா பிளேஸ் சீரிஸின் (Lava Blaze Series) கீழ் அமரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கடைசியாக இந்த சீரீஸின் கீழ் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும் (அமேசான் இந்தியா வழியாக) வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








