Home
Mobile

இனிமே இங்க இந்திய பிராண்ட் LAVA தான் கிங்-கு.. 120Hz AMOLED டிஸ்பிளே கொண்ட மலிவான 5G Phone அறிமுகம்!

இந்திய மொபைல் பிராண்ட் (Indian Mobile Brand) ஆன லாவா (LAVA) தனது அதிகாரப்பூர்வ தளத்தில் - லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி (Lava Blaze AMOLED 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அமைதியாக பட்டியலிட்டு உள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த ஸ்மார்ட்போன் - அமோஎல்இடி டிஸ்பிளே கொண்ட மிகவும் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களில் (Affordable 5G smartphone with AMOLED display) ஒன்றாக இருக்கும். வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலை? இதோ விவரங்கள்:

லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Lava Blaze AMOLED 5G Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் FHD+ 3டி கர்வ்டு-எட்ஜ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (3D curved-edge AMOLED display) கொண்டுள்ளது.

LAVA: 120Hz AMOLED டிஸ்பிளே கொண்ட மலிவான 5G Phone அறிமுகம்!

சிப்செட்டை பொறுத்தவரை லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300 chipset) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் ப்ளோட்வேர் இல்லாத வெர்ஷனை (Android 14 Bloatware-free version) இயக்குகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இது 4GB, 6GB மற்றும் 8GB ஆகிய மூன்று ரேம் வகைகளில் வாங்க கிடைக்கும். இவைகள் முறையே 4GB, 6GB மற்றும் 8GB விர்ச்சுவல் ரேம்-ஐயும் (Virtual RAM) வழங்கும். அனைத்தும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (MicroSD Card Slot) இல்லை.

கேமராவை பொறுத்தவரை லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் சோனி சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ் ஆகியவைகளை ரியர் பேனலில் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; இது பிரகாசமான செல்பீக்களுக்கான ஸ்க்ரீன் ஃபிளாஷை ஆதரவை (Screen Flash) கொண்டு உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது5,000mAh பேட்டரிஉடன் வருகிறது. இது USB Type-C போர்ட் வழியாக 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-Screen Finger Print Scanner), டூயல் சிம் 5ஜி, வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. எடையில் 183 கிராம் உள்ளது மற்றும் 8.45 மிமீ ஸ்லிம் டிசைனை பெற்றுள்ளது.

LAVA: 120Hz AMOLED டிஸ்பிளே கொண்ட மலிவான 5G Phone அறிமுகம்!

லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: லாவா பிளேஸ் அமோஎல்இடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் ( Titanium Grey and Starlight Purple) ஆகிய 2 கலர்களில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஆனால் விலை (Lava Blaze AMOLED 5G Price) மற்றும் சரியான வெளியீட்டு தேதி (Lava Blaze AMOLED 5G Launch Date) இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இது விரைவில் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட்போன் - லாவாவின் சிக்னேச்சர் ப்ரீ சர்வீஸ் அட் ஹோம் (Free service at home) வசதியையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze AMOLED 5G Smartphone Silently Launched in India With Impressive Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X