மொத்த சாம்ராஜ்யம் மிரளுது.. ரூ.15,000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் மிரளும்படியான டிசைன் மட்டுமல்லாமல், சோனி சென்சார் மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளேவுடன் அடிமட்ட பட்ஜெட்டில் லாவா பிளேஸ் அமோலெட் 2 (Lava Blaze AMOLED 2) மாடலானது வெளியாக இருக்கிறது. இந்த பிளேஸ் போனின் டிசைன் மற்றும் முக்கிய பீச்சர்களுடன் வெளியீட்டு தேதியை லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவின் லாவா நிறுவனத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டன. ஏனென்றால், சீன நிறுவனங்களுக்கு நிகரான பிரீமியம் டிசைனை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் கொடுக்கிறது. அதோடு பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதில் பிளேஸ் மாடல்கள் தனி இடம் பிடித்துள்ளன. இப்போது, லாவா பிளேஸ் அமோலெட் 2 அடுத்த பட்ஜெட் மாடலாக சேர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதை டீசர் மூலம் லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு லீனியா டிசைனில் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பெதர் ஒயிட் (Feather White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் போன்களுக்கு நிகரான டிசைன் இருப்பதால், லாவா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லாவா பிளேஸ் அமோலெட் 2 அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவானது பிளாட் டிசைனில் பஞ்ச்-ஹோல் செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. லீனியா டிசைனில் வெறும் 7.55 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது.
ஆகவே, இந்த செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் மாடலாக இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 மாடலை எதிர்பார்க்கலாம். அதுவும் அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. சோனி சென்சாருடன் (Sony Sensor) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (MediaTek Dimensity 7060) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் கொடுக்க இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களை எதிர்பார்க்கலாம். 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போனில் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ச் சென்சார் கிடைக்க இருக்கிறது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 மாடலானது ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, லாவா பிரியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








