பொளக்குது ஆர்டர்.. ஆஃபர் விலை ரூ.12,542 க்கு AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் லாவா பிளேஸ் அமோலெட் 2 (Lava Blaze AMOLED 2) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே போக 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பல்வேறு பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த லாவா போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,203 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.661 தள்ளுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,542 விலைக்கு இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

லாவா பிளேஸ் அமோலெட் 2 அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7060 ஆக்டா கோர் 6என்எம் (MediaTek Dimensity 7060 Octa Core 6nm) சிப்செட்டை இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்கிரேட் கொடுத்துள்ளது.
2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Amoled Punch-Hole Display) கிடைத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைத்துள்ளது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கொடுத்துள்ளது.
800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் கியூவிஜிஏ (QVGA) லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொடுத்துள்ளது. இதில் 2K 30FPS வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது.
மேலும், பியூட்டி மோட் (Beauty Mode), குரூப் போட்டோ (Group Photo) மற்றும் ஏஐ எமோஜி (AI Emoji) கிடைக்கிறது. டூயல் வியூ வீடியோ (Dual View Video), ப்ரோ வீடியோ (Pro Video), ஸ்போர்ட்ஸ் (Sports), ப்ரோ மோட் (Pro Mode), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் டைம் லேப்ஸ் (Time Lapse) போன்ற வீடியோ பீச்சர்களையும் இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைத்துள்ளது. 8 எம்பி ப்ரன்ட் கேமரா செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. மேலும், 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh லித்தியம்-பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது. மிட்நைட் பிளாக், ஒயிட் பெதர் கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








