Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. LAVA 5ஜி போன் விலை குறைப்பு.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.13,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி முன்பு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.12999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. LAVA 5ஜி போன் விலை குறைப்பு.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன இந்த லாவா போன் வெளிவந்துள்ளது. மேலும இந்த டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் , 1.07 பில்லியன் கலர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 6nm SoC) சிப்செட் உடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனுக்கு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ (QVGA) கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. நைட் மோட், ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், ப்ரோ மோட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. LAVA 5ஜி போன் விலை குறைப்பு.. எந்த மாடல்?

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பிரீமியம் லுக்கில் ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்கலாம். பின்பு இந்த போனின் எடை 174 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Lava Blaze AMOLED 2 5G with 6GB RAM price Drop in Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X