வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.13499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 33W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) மாடலானது இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் டிஸ்பிளே மற்றும் டிசைனை கொடுப்பதில் சீன நிறுவனங்களையே லாவா மொபைல் நிறுவனம் தூக்கி சாப்பிட்டு வருகிறது. இப்போது, லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி மூலம் லைனியா டிசைனில் ஸ்லீக் பாடியில் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கொடுத்துள்ளது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. அமேசான் (Amazon) மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒட்டுமொத்த பீச்சர்களையும் பார்த்துவிடுவோம். முதலில் டிஸ்பிளேவில் இருந்து தொடங்கலாம்.
லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): இந்த லாவா போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) கிடைக்கிறது. பேஸ் அன்லாக் செய்து கொள்ளலாம்.
இந்த செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் பாடி கொண்ட மாடலாக இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி இருக்கிறது. ஏனென்றால், 7.5 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதோடு லைனியா டிசைனுடன் ஸ்லீக் பாடி கொடுக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ் 752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 SoC) கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போனில் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி யுஎஸ்பி (Type-C USB) போர்ட் கிடைக்கிறது. ஒரேவொரு வேரியண்ட் வெளியாகி இருக்கிறது.
ஆகவே, 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் தளத்தில் விற்பனைக்க கிடைக்க இருக்கிறது.
இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 500K அன்டுடு ஸ்கோர் பெற்றுள்ளது. ஆகவே, இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் கேமிங் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த ரூ.13,499 பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பீச்சர்கள் கொண்ட மாடலாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








