அமேசானில் ஆர்டர் அள்ள போகுது.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் சம்மர் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 6nm SoC) சிப்செட் உடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன இந்த லாவா போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் , 1.07 பில்லியன் கலர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனுக்கு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ (QVGA) கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. நைட் மோட், ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், ப்ரோ மோட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பிரீமியம் லுக்கில் ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்கலாம். பின்பு இந்த போனின் எடை 174 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications