சீன கம்பெனிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் LAVA.. வருகிறது புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava) சீன நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாகத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது லாவா.
அதாவது புதிய லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். இந்த புதிய லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் அறிமுகத்திற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் உடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த லாவா போன் அறிமுகமாகும்.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி வசதியுடன் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








