Home
Mobile

மொத்த ஆர்டரும் இந்த ஒன்னுக்கு.. ரூ.12400 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா (Lava) நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி விலைக்கு வருகிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களின் பட்டையை கிளப்புகிறது. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 12,400 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கும், எஸ்பிஐ டெபிட் கார்டுக்கும் இந்த உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

மொத்த ஆர்டரும் இந்த ஒன்னுக்கு.. ரூ.12400 பட்ஜெட்ல SONY கேமரா.. மாடல்?

அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.12,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். பிரீமியம் லுக்கில் ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 6nm SoC) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்கிரேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ (QVGA) கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்கிரீன் ஃபிளாஷ் கிடைக்கிறது. நைட் மோட், ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், ப்ரோ மோட் கிடைக்கின்றன.

இதுபோக மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைப்பதால், குவாலிட்டி பக்காவாக எதிர்பார்க்கலாம். 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி மாடலில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி இருந்தும், 7.55 எம்எம் தடிமன் மட்டுமே வருகிரது. அதேபோல 174 கிராம் எடை மட்டுமே இருக்கிறது. ஆகவே, ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் மாடலாக இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze AMOLED 2 5G Available At Cheapest Price in Amazon Offer Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X