Home
Mobile

வெளுக்குது விற்பனை.. மட்ட விலைக்கு 5G போன்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் லாவா ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 50 எம்பி பிரைமரி கேமரா, அமோலெட் டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,799 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.640 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,159 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ வழியாகவும் இதை வாங்கி கொள்ளலாம்.

வெளுக்குது விற்பனை.. மட்ட விலைக்கு 5G போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி அம்சங்கள் (Lava Blaze AMOLED 2 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (6nm Octa Core MediaTek Dimensity 7060) சிப்செட் கிடைக்கிறது. கிடைக்கிறது. மேலும், 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்டை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது.

டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது. மேலும், கியூவிஜிஏ (QVGA) செகண்டரி கேமரா கொடுத்துள்ளது.

இந்த பிரைமரி கேமராவில் 2K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், நைட் மோட் (Night Mode) கிடைக்கிறது. இதுபோக ஃபிலிம் மோட் (Film Mode), எச்டிஆர் மோட் (HRD Mode), ப்ரோ மோட் (Pro Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்களையும் கொண்டுள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 மெகாபிக்சல் ப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படி 7.55 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. அதேபோல 174 கிராம் எடை மட்டுமே கொடுக்கிறது. இந்த லாவாவில் 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 801 (Wi Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளது. ஃபெதர் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் இந்த லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze AMOLED 2 5G 6GB RAM Available At Discounted Price in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X