இதைவிட கம்மி விலைக்கு 5ஜி போன் கிடைக்கவே கிடைக்காது.! Lava Blaze 5G விற்பனை தேதி இதோ.!

|

லாவா (Lava) நிறுவனம், இந்திய மொபைல் காங்கிரஸின் போது, ​​Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் மிகவும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் நிறுவனம், Lava Blaze 5G ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விலை வெறும் ரூ. 9,999 என்று அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இவ்வளோ கம்மி காசுக்கு 5ஜி போன் யாருமே தரமாட்டாங்க.!

இவ்வளோ கம்மி காசுக்கு 5ஜி போன் யாருமே தரமாட்டாங்க.!

இவ்வளவு குறைத்த விலையில் ஒரு புது 5ஜி போனை அறிமுகம் செய்து, விலையையும் தெளிவாக போட்டுடைத்து மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது Lava நிறுவனம்.

5ஜி டிவைஸ் வாங்க வேண்டும் என்ற ஐடியாவில் இருந்த அனைவரின் கவனமும் இப்போது, Lava Blaze 5G மீது மாறியுள்ளது. விலையை பற்றி அறிவித்த Lava இந்த போனுக்கான விற்பனை தேதியை இதுவரை அறிவிக்காமல் இருந்தது.

புதிய Lava Blaze 5G வாங்க மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வெயிட்டிங்.!

புதிய Lava Blaze 5G வாங்க மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வெயிட்டிங்.!

ஆனால், இப்போது ஒருவழியாக நிறுவனம் ​​Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அறிவித்துவிட்டது.

இத்துடன் ஆரம்ப கால முதல் விற்பனையில், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த விபரங்களையும் லாவா இப்போது வெளியிட்டுள்ளது.

சரி, இப்போது எந்த தேதியில், என்ன விலையில் இந்த புதிய Lava Blaze 5G போனை நாம் வாங்கலாம் என்று பார்க்கலாம்.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க.! விற்பனை தீ-யா இருக்க போகுது.!

இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க.! விற்பனை தீ-யா இருக்க போகுது.!

இந்திய சந்தையில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் Lava Blaze 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று Lava நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகையால், உங்கள் காலனெடெரில் நவம்பர் 15 ஆம் தேதியை இப்போதே மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நினைவுகூர, Lava Blaze 5G ஆனது MediaTek Dimensity 700 சிப்செட் உடன் 4GB ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

மலிவு விலையில இப்படி பெஸ்ட் அம்சங்களா?

மலிவு விலையில இப்படி பெஸ்ட் அம்சங்களா?

இந்த ஸ்மார்ட்போன் 90Hz LCD டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமரா அமைப்புடன் வருகிறது. Lava Blaze 5G மலிவான 5G-இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக வருகிறது. இது Redmi 11 Prime 5G, POCO M4 Pro 5G மற்றும் Realme 9i 5G போன்றவற்றுடன் போட்டியிடும்.

இந்தியாவில் Lava Blaze 5G விலை, கிடைக்கும் தன்மை, சலுகை, தள்ளுபடி மற்றும் இதன் முழு அம்சங்களைக் கூர்ந்து இப்போது பார்க்கலாம்.

Airtel சைலெண்டாக செய்த வேலை.! பட்டி தொட்டியெல்லாம் கலக்கப்போகும் புது ரூ.199 பிளான்.!Airtel சைலெண்டாக செய்த வேலை.! பட்டி தொட்டியெல்லாம் கலக்கப்போகும் புது ரூ.199 பிளான்.!

Lava Blaze 5G விலை மற்றும் விற்பனை

Lava Blaze 5G விலை மற்றும் விற்பனை

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை இப்போது இந்தியாவில் ரூ.10,999 என்ற நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அறிமுகச் சலுகையாக, Lava Blaze 5G ஆனது வரும் முதல் விற்பனையில் ரூ. 9,999 என்ற விலைக்கு வாங்குவதற்குக் கிடைக்கும்.

இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 15 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு அமேசான் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும்.

Lava Blaze 5G சிறப்பம்சம்

Lava Blaze 5G சிறப்பம்சம்

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் அளவுள்ள HD+ கொண்ட 90Hz ரெப்ரெஷ் ரேட் வீத LCD பேனலைக் கொண்டுள்ளது. இது 1600 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

Lava Blaze 5G Widevine L1 சான்றிதழைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் உடன் வருகிறது. மலிவு விலை 5ஜி டிவைஸிற்கு இது கச்சிதமான சிப்செட் தான்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

கேமரா மற்றும் சிப்செட் விபரம்

கேமரா மற்றும் சிப்செட் விபரம்

Redmi 11 Prime 5G, POCO M3 Pro 5G, Realme 8 5G போன்ற பல பிரபலமான பட்ஜெட் விலை 5ஜி டிவைஸ்களில் கூட இந்த சிப்செட் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Lava Blaze 5G ஆனது 50MP பிரைமரி ஷூட்டரை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஒரு டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் இவ்வளவு பெரிய பேட்டரியா?

பட்ஜெட் விலையில் இவ்வளவு பெரிய பேட்டரியா?

இதன் முன்பக்கத்தில் 8MP ஷூட்டர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mah பேட்டரி யூனிட் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றங்களுக்கு டைப்-சி போர்ட்டை நம்பியுள்ளது. ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

இது பவர் ஸ்விட்ச் உடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், இது ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

எக்ஸ்ட்ரா ரேம் மற்றும் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் ஆதரவு

எக்ஸ்ட்ரா ரேம் மற்றும் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் ஆதரவு

முன்பே சொன்னது போல், இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் ஆதரவிற்கு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் (Hybrid) கொண்டுள்ளது.

புதிய Lava Blaze 5G ஆனது Glass Green மற்றும் Glass Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. இது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் வழங்குகிறது.

அடுச்சு புடுச்சு வாங்க போறாங்க.! ஒட்டுமொத்த இந்தியாவும் ஈஸியா 5ஜி-க்கு மாறப்போகுது.!

அடுச்சு புடுச்சு வாங்க போறாங்க.! ஒட்டுமொத்த இந்தியாவும் ஈஸியா 5ஜி-க்கு மாறப்போகுது.!

Lava Blaze 5G சாதனத்தின் இணைப்பு அம்சங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்ஸங்களை ஆதரிக்கிறது.

இந்த Lava Blaze 5G வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஆரம்ப சலுகையாக வெறும் ரூ. 9,999 விலைக்கு கிடைக்கும். இந்த சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை.

விற்பனைக்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட்போன் மீது ஓவர் டிமாண்ட் இருப்பதனால், வேகமாக முந்தி இருக்கும் யூனிட்களை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Lava Blaze 5G will go on sale starting November 15 via Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X