யாருடைய வேண்டுதலோ கடவுளுக்கு கேட்டுடுச்சு.! மிக-மிக மலிவு விலையில் 6GB ரேம் உடன் 5G போன்.!
கம்மி விலையில் புது 5ஜி போன் (5G Phone) வாங்க முடியுமா? அதுவும் வெறும் ரூ.10,000 விலைக்குள் 5ஜி இணக்கத்துடன், அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க முடியுமா? என்று ஏக்கத்துடன் கேள்வி கேட்ட பட்ஜெட் பிரியர்களுக்கு Lava Blaze 5G என்ற பெயர் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
ஆம், லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) சாதனம் தான் இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் (Cheap price 5G smartphone) மாடலாகும். இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், இன்னும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால், இந்த தகவலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்கிறோம். இந்திய மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற மொபைல் போன் மாடல்களில் இந்த Lava Blaze 5G மாடலும் ஒன்று.

முன்பை விட அதிக ரேம் உடன் மிகவும் மலிவு விலையில் Lava Blaze 5G ஸ்மார்ட்போன்.!
இந்தியாவில் நிறுவனத்திற்குக் கிடைத்த ஏகபோக வரவேற்பை தொடர்ந்து, லாவா (Lava) நிறுவனம் இப்போது Lava Blaze 5G ஸ்மார்ட்போனை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வேறுபட்ட ஸ்டோரேஜ் மாறுபாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், லாவா இந்தியாவில் Lava Blaze 5G-ஐ அறிமுகப்படுத்திய போது, அது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வந்தது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலானது, இதன் முந்தைய வேரியண்ட் மாடலை விட அதிக ரேம் அனுபவத்தை வழங்குகிறது. இது 6ஜிபி ரேம் உடன் வருவதனால், பயனர் அனுபவம் இன்னும் சிறப்பாக அமைகிறது.

மிக-மிக மலிவு விலையில் தரமான 5ஜி மொபைல் போன்.!
முந்தைய மாடல்களில் கிடைக்கும் சராசரி பயனர் அனுபவத்தை விட, இதில் சற்று அதிகமான ரேம் கிடைப்பதனால், மல்டி டாஸ்கிங் (Multi tasking) செய்யும் நபர்களுக்கு இது சூப்பர் ஸ்மூத் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இன்றைய மொபைல் ஆப்ஸ்கள் (Mobile Apps) மிகவும் கனமானவை மற்றும் பின்னணியில் இயங்கக் கோருகின்றன என்பதனால், அதிக ரேம் இருப்பது உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதனால் தான், லாவா நிறுவனம் இப்போது அதன் Lava Blaze 5G இல் 6ஜிபி ரேம் + 3ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று அதன் ரேம் அளவை அதிகரித்துள்ளது. ரேம் அதிகரிக்கப்பட்டதினால், இதன் விலை அதிகரித்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதன் இப்போதும் மலிவு விலை பிரிவில் வருகிறது என்பதே மகத்தான விஷயமாகும். இந்த Lava Blaze 5G இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்போது முதல் இந்தியாவில் ஆர்டர் செய்ய கிடைக்கும்?
ஆனால், அறிமுக சலுகையாக, இந்த Lava Blaze 5G சாதனம் இப்போது லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியாவில் ரூ.11,499 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த Lava Blaze 5G (6GB + 128GB) ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15, 2023 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் பற்றி இதற்கு முன்பு பலமுறை நாம் பார்த்திருந்தாலும், இப்போது குயிக் ஆக இதன் ஸ்பெக்ஸை பார்த்துவிடலாம்.
Lava Blaze 5G (6GB + 128GB) சிறப்பம்சம்:
- 6.5-இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்பிளே
- 90Hz ரெப்ரெஷிங் ரேட்
- MediaTek Dimensity 700 சிப்செட்
- 6GB ரேம் + 3GB விர்ச்சுவல் ரேம் + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 1TB வரை மைக்ரோ-SD கார்டு ஸ்லாட் ஸ்டோரேஜ்
- Android 12 OS இயங்குகிறது
- 50 MP AI-டிரிபிள் கேமரா அமைப்பு
- 8MP செல்ஃபி சென்சார்
- 5000mAh பேட்டரி
- ப்ளூ மற்றும் க்ரீன் நிறங்கள்
முக்கியமான விஷயமே இது தான்.. கவனிக்க மறக்காதீர்கள்.!
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், நீங்கள் வாங்கும் இந்த லாவா போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், நிறுவனம் உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து மொபைல் சர்வீஸ் செய்துகொடுக்கும் என்று வாக்குறுதியை வழங்கியுள்ளது. இனி சர்வீஸ் செய்ய நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு செல்ல வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications








