என்னது.! 5ஜி போனே இவ்வளவு கம்மி விலையா? புது Lava Blaze 5G இந்தியாவில் அறிமுகம்.!

|

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava), தற்போது நடைபெற்று வரும் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 (IMC) இல் பிளேஸ் (Blaze) தொடரின் கீழ் புதிய Lava Blaze 5G என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. IMC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனம் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த போனை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Lava Blaze வரிசையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 5G மாடல்.!

Lava Blaze வரிசையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 5G மாடல்.!

Lava நிறுவனம் தற்போது அதன் Blaze வரிசையில் புதிதாக Lava Blaze என்ற 4G ஸ்மார்ட்போனை கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் Lava Blaze Pro என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. இதுவும் 4G இணைப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட சாதனமாகும். இதற்கு அடுத்தபடியாக, Lava நிறுவனம் இப்போது, ​​5G மாடலை அறிமுகம் செய்கிறது. 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த தருணத்தில் Lava நிறுவனம் மலிவு விலையில் 5G போனை அறிவித்துள்ளது.

இவ்வளவு கம்மி விலையில் 5G போனா? Lava Balze 5G விலை என்ன?

இவ்வளவு கம்மி விலையில் 5G போனா? Lava Balze 5G விலை என்ன?

Lava Balze 5G என்ற இந்த ஸ்மார்ட்போனை நாம் என்ன விலைக்கு வாங்கலாம்? மலிவு விலை என்றால், இது என்ன விலை வரம்பில் வருகிறது. இந்த புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என்பது போன்ற தகவலை விரிவாகப் பார்க்கலாம். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி சாதனம் இதுவாகும்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

Lava Blaze 5G போனுக்கான ப்ரீ-புக்கிங் எப்போது ஆரம்பம்?

Lava Blaze 5G போனுக்கான ப்ரீ-புக்கிங் எப்போது ஆரம்பம்?

Lava Blaze 5G சாதனம் ப்ளூ மற்றும் க்ரீன் நிறங்களில் வெளிவரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய டிவைஸ் தீபாவளிக்கு முன் ப்ரீ-புக்கிங் செய்யக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் வெறும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், மலிவு விலையில் புதிய 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்கத் துடிக்கும் பயனர்களுக்கு இது ஒரு அற்புதமான சாய்ஸ் ஆக அமைகிறது. Lava Blaze 5G இன் சரியான விலை என்னவென்று தெரியவில்லை.

Lava Blaze 5G போனின் சிறப்பம்சம்

Lava Blaze 5G போனின் சிறப்பம்சம்

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 1600 × 720 பிக்சல் கொண்ட 6.5' இன்ச் HD+ LCD டிஸ்பிளே உடன் கிடைக்கிறது. இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய 2.5D வளைந்த டிஸ்பிளேவுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 700 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் அம்சத்துடன் வருகிறது. என்னதான், இது 4ஜிபி ரேம் உடன் வந்தாலும், இதில் 3ஜிபி ரேம் கூடுதலாக விர்ச்சுவல் முறையில் கிடைக்கிறது.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

லாவா பிளேஸ் 5ஜி போனின் கேமரா அம்சம்

லாவா பிளேஸ் 5ஜி போனின் கேமரா அம்சம்

இதனால், இதன் ஒட்டுமொத்த ரேம் அளவு 7ஜிபி ரேம் ஆக கிடைக்கிறது. இதன் இன்டர்னல் ஸ்டோரேஜ் 128ஜிபி உடன் வருகிறது. இது Redmi 11 Prime, Poco M4 5G மற்றும் பலவற்றில் இந்த சிப்செட்டைப் பார்த்தோம். இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஆதரவுடன் வருகிறது. கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இது 50MP (f/1.8) பிரைமரி கேமராவுடன், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் பெஸ்ட்?

யாருக்கெல்லாம் இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் பெஸ்ட்?

செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 8MP (f/2.0) செல்ஃபி கேமரா உள்ளது. இந்த சாதனம் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி யூனிட்டை பேக் செய்கிறது. இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறதா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், Lava Blaze 5G சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உடன் வருகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இந்த சாதனம் 5G பேண்ட் ஆதரவு, 4G VoLTE, டூயல்-பேண்ட் Wi-Fi மற்றும் புளூடூத் 5.1 அம்சத்துடன் வருகிறது. மலிவு விலையில் 5ஜி போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

Read more about:
English summary
Lava Blaze 5G Launched at India Mobile Congress 2022 Under Rs 10000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X