Home
Mobile

சீன கம்பெனிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் LAVA.. மஞ்சள் நிற Vibe Light.. ரூ.9,999-க்கு புது 5G போன்!

Lava New Phone 5G: இந்திய சந்தையில் "கொச கொசவென" புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சீன நிறுவனங்களுக்கு மத்தியில் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா நிறுவனம் "ஸ்லோ அண்ட் ஸ்டெடி" ஆக.. போட்டித்தன்மை மிக்க 5ஜிபோன்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

ஒருவழியாக.. லாவா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் வெளியான பல டீஸர்களுக்கு பிறகு.. லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதிப்படுத்தபட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் வழியாக லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு, இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Lava Blaze 3 5G: மஞ்சள் நிற Vibe Light.. ரூ.9,999-க்கு புது 5G போன்!

லாவா பிளேஸ் 3 5ஜி என்ன விலைக்கு வரும்? வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும் கூட அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9999 என்கிற சிறப்பு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முதல் விற்பனையின் போது அல்லது அறிமுகமான சில நாட்களுக்கு ரூ.9999 க்கு வாங்க கிடைக்கும். பின்னர் அசல் விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அறிமுகமான லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக ருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் - கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கோல்ட் ஆகிய 2 கலர்களில் அறிமுகமாகும்.

லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி செக்மென்ட்டில் 'வைப் லைட்' அம்சத்த்துடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாகும். டீஸர் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, வைப் லைட் என்பது ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில்.. ஒரு சர்குலர் ரிங் வடிவத்தில் உள்ள மஞ்சள் நிற பிளாஷ் லைட் ஆகும். இது லோ-லைட் புகைப்படங்களின் தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீமியம் கிளாஸ் பேக் டிசைன் உடன் வரும் லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி + 2எம்பி ஏஐ கேமராக்கள் உள்ளன. இது பேக் பேனலின் மேல்-இடது மூலையில் ஒரு சதுர வடிவிலான மாட்யூலில் பேக் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வழக்கமான ரேம் + 6ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 128ஜிபி-ஐ கொண்டிருக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் எச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் க்ளீன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Blaze 3 5G with Vibe Light Feature Launching Soon in India For Price Rs 9999 Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X