Home
Mobile

தெறிக்க விடுது சேல்.. ரூ.9,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்கு கிரெடிட் கார்டு தேவையில்லை. மார்கெட் விலையில் இருந்து நேரடியாக ரூ.1,500 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோக ரூ.299 கேஷ்பேக் கிடைக்கிறது.

தெறிக்க விடுது சேல்.. ரூ.9,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா!

லாவா பிளேஸ் 3 5ஜி அம்சங்கள் (LAVA Blaze 3 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் யுனிசோக் சிப்செட் மட்டுமே பெரும்பாலான மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இதில் டைமன்சிட்டி சிப்செட் வருகிறது.

ஆனால், பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மட்டுமல்லாமல், 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போனில் 6.56 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) 2.5D கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுவொரு பஞ்ச் ஹோல் டிஸ்பிளே மாடலாகும். இதில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 2K ரெசொலூஷன் மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ வீடியோ மோட் (Pro Video Mode) கிடைக்கிறது.

டூயல் வியூ வீடியோ (Dual View Video), குரூப் போட்டோ (Group Photo), ஏஐ எமேஜ் மோட் (AI Emoji Mode) ஆகிய பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 201 எடை கொண்டிருக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. 5ஜி, 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது. கிளாஸ் ப்ளூ (Glass Blue), கிளாஸ் கோல்டு (Glass Gold) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LAVA Blaze 3 5G With 50MP Camera Sale Under Rs 10000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X