Home
Mobile

மலிவு விலையில் புது Lava 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் லாவா பிளேஸ் 3 5ஜி போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

லாவா பிளேஸ் 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze 3 5G Specifications): 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மலிவு விலையில் புது Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன் வெளிவரும். இந்த டைமன்சிட்டி சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

6ஜிபி ரேம் ( 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் ) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் இந்த லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மலிவு விலையில் புது Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

சைடு-பவர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-facing fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன். மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கோல்ட் ஆகிய நிறங்களில் இந்த போன் வெளிவரும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக ரூ.9,999 விலையில் விற்பனைக்கு வரும் லாவா பிளேஸ் 3 5ஜி போன். மேலும் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze 3 5G phone specifications and price were revealed : Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X