பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் இந்தியாவில் இன்று லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மலிவு விலையில் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லாவா பிளேஸ் 3 5ஜி அம்சங்கள்(Lava Blaze 3 5G Specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி 2.5டி கர்வ்டு (LCD 2.5D Curved) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 × 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டைமன்சிட்டி சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி ஏஐ கேமரா கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி உடன் இந்த லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு-பவர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-facing fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 3 5ஜி போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கிளாஸ் ப்ளூ (Glass Blue) மற்றும் கிளாஸ் கோல்ட் ( Glass Gold) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.1 ( Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் 3 5ஜி போனின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. ஆனால் வங்கி சலுகைகள் மூலம் இந்த போன் ரூ.9,999-க்கு வாங்குவதற்கு கிடைக்கும். வரும் செப்டம்பர் 18-ம் தேதி லாவா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் (Amazon) தளங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications