ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.10,999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. RING டிசைன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை மிரளவிடும் விதமாக வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லாவா பிளேஸ் 2 அம்சங்கள் (Lava Blaze 2 Specifications): இந்த லாவா போன் 6.56 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 2.5D கர்வ்ட் எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த லாவா மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த பிளேஸ் போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த 6 ஜிபி மாடலில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) சப்போர்ட் வருகிறது.
இந்த லாவா பிளேஸ் 2 மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ செகண்டரி கேமரா வருகிறது. இந்த கேமரா ரிங் லைட் (Ring Light) டிசைன் கொண்டிருக்கிறது. அதில் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெயின் கேமராவில் ஃபிலிம், ஸ்லோவ் மோஷன், டைம் லேப்ஸ், யுஎச்டி, ப்யூட்டி, எச்டிஆர், நைட், போர்ட்ராய்டு, ப்ரோ மற்றும் பனோரமா உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன. அதோடு 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த லாவா மாடலில் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வருகிறது.
அதேபோல பட்ஜெட் போன்களில் வரும் 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது. எஃப்எம் ரேடியோ (FM Radio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாவா பிளேஸ் 2 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியுடன் இந்த போன் 203 கிராம் எடைக் கொண்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 51 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை வருகின்றன. இந்த போனுக்கு 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 வரை ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுகிறது.

இந்த லாவா மாடலில் பிரீமியம் கிளாஸ் பேக் டிசைன் (Premium Glass Back Design) வருகிறது. அதோடு கிளாஸ் பிளாக் (Glass Black), கிளாஸ் ப்ளூ (Glass Blue), கிளாஸ் லாவெண்டர் (Glass Lavender) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் லாவா இந்தியா (Lava India) தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications