ஆர்டர் பிச்சிக்க போகுது.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. நவ.2-ல் மலிவு விலையில் வரும் 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G ) ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த லாவா 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் லாவா பிளேஸ் 2 5ஜி போனின் வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 2-ம் தேதி லாவா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். சமீபத்தில் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போனின் டீசர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே அன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 6020 பிராசஸர் (Dimensity 6020 processor) உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று லாவா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எல்சிடி பேனல் (LCD panel) மற்றும் சென்டர் பஞ்ச்-ஹோல் (Center punch-hole) டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின டிஸ்பிளே ஆனது ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. குறிப்பாக இதில் 50எம்பி பிரைமரி கேமராவும் உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் லாவா பிளேஸ் 2 5ஜி போன் ரூ.9,000 அல்லது ரூ.10,000 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த லாவா 5ஜி போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo courtesy: Sudhanshu Ambhore, twitter, 91mobiles,


Click it and Unblock the Notifications








