புதுசா போன் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருகிறது புது Lava போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லாவா நிறுவனம் ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
அந்த டீசரில் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாவா பிளேஸ் 2 4ஜி போன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.8,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதன் 5ஜி போனும் விரைவில் வெளிவர இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக லாவா பிளேஸ் 2 4ஜி உடன் ஒப்பிடும்போது லாவா பிளேஸ் 2 5ஜி பல்வேறு மாற்றங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்த 5ஜி போனின் கேமரா வடிவமைப்பும் சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது வட்ட வடிவ ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போன்.
அதேபோல் பெரிய டிஸ்பிளே, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் லாவா பிளேஸ் 2 5ஜி போன் அறிமுகமாகும். வரும் வாரங்களில் லாவா பிளேஸ் 2 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.
மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லாவா பிளேஸ் 2 4ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் UNISOC T616 ஆக்டோ-கோர் 12என்எம் பிராசஸர் உடன் Mali-G57 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல்.

லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, புளூடூத் 5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








