தூக்கி சாப்பிட்ட டிராகன்.. ரூ.10,000 பட்ஜெட்ல 50MP கேமரா.. ஜூலை 25 இருக்கு.. குவிய போகுது ஆர்டர்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான புதுப்புது மாடல்களை இந்தியாவின் லாவா நிறுவனம் களமிறக்கி வருகிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கான மார்கெட்டில் தனியிடம் பிடித்துவிட்டது. இப்போது, அடுத்த மாடலுக்கு லாவா ரெடியாகிவிட்டது. அதிலும் வித்தியாசமான கேமராவுடன் இந்த புது மாடல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, விற்பனை மற்றும் சிப்செட் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த புதிய லாவா போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
லாவா நிறுவனத்தின் பிளேஸ் சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், இந்த மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதோடு பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) போன் புதிதாக வெளியாக இருக்கிறது.

ஜூலை 25ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. அதோடு ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் கொண்ட மாடலாக இது வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. கூடவே, பெய்ஜ் கலரில் இருக்கும் முழு டிசைன் மற்றும் டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன.
பெய்ஜ் மட்டுமல்லாமல், பிளாக் கலரும் மார்கெட்டில் கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. டிசைனை பார்க்கையில், 50 எம்பி ஏஐ மெயின் கேமரா மற்றும் அதற்கு செகண்டரி கேமரா கிடைக்க இருக்கிறது. இது டிசைனை பார்த்து உறுதி செய்யப்பட்ட பீச்சர்களாகும். இவை மட்டுமே அதிகாரப்பூர்வமானவை.

இது தவிர வேறு பீச்சர்கள் வெளியாகவில்லை. ஆனால், ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கே வெளியாகும் என்பது உறுதியாகும். இதற்கு முன்பு வெளியான பிளேஸ் மாடல்களின் பீச்சர்களை ஒப்பிட்டு பார்க்கையில், நிச்சயம் இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாவது உறுதியாகும். இப்போது, முக்கிய விஷயத்துக்கு வருவோம்.
இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனின் கேமரா மாட்யூல் (Camera Module) ஆனது ரெயின்போ-லைக் கலர்கள் கொண்ட ரெஃப்ளெக்ஸ்ட் சப்போர்ட் கொடுக்க இருக்கிறது. ஆகவே, டூயல் கேமராவை சுற்றி இருக்கும் பம்ப் உங்களுக்கு மல்டி கலர் ரெஃப்ளெக்சன் கொடுக்கும். ஆனால், இது பிளாக் கலர் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்க இருக்கிறது.
பெய்ஜ் கலர் வேரியண்ட்டின் கிடைக்கவில்லை. இந்த விவரங்கள் மட்டுமே இப்போதைக்கு தெரியவந்துள்ளன. ஜூலை 25ஆம் தேதி நெருங்குவதால், மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகும், அல்லது லாவா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும். பிளேஸ் சீரிஸ் இந்த மாடலுக்கு முன்னதாக லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) வெளியாகியது.
ஆனால், இந்த போனின் பட்ஜெட் ரூ.16,999ஆக இருந்தது. ஏனென்றால், இது 3டி கர்வ்ட் மெயின் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேக் கேமராவுக்கு அருகில் செகண்டரி டிஸ்பிளேவும் கொடுத்தது. அதேபோல 64 எம்பி சோனி கேமரா, அமோலெட் பேனல், மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுத்தது. இதனாலேயே விலை அதிகமாக இருக்கிறது.
புதிதாக வர இருக்கும் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனின் பீச்சர்கள் அப்படியில்லை. பட்ஜெட் மாடல்களுக்கு ஏற்றபடியே இருக்கிறது. ஆகவே, இதை மலிவான விலைக்கு எதிர்பார்க்கலாம். கேமரா பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட் மாடலாக வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல டிசைனிலும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பில்ட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








