Home
Mobile

மொத்த சீன கூட்டத்தையும் சிதறவிட இந்திய நிறுவனம்.. வெறும் ரூ.9999 க்கு சூப்பர் 5G போன்.. விற்பனை ஆரம்பம்!

எவ்வளவு சீக்கிரமாக.. ரூ,10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தரமான 5ஜி போன்களை அறிமுகம் செய்கிறோமோ.. அவ்வளவு சீக்கிரமாக இந்திய மொபைல் சந்தையை ஆட்சி செய்யலாம் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பட்ஜெட் விலை 5ஜி போன்களில் பணியாற்றி வருகின்றன.

ஏனென்றால் 3ஜி மற்றும் 4ஜி போன்களை வைத்திருக்கும் பலரும் 5ஜி போன்களை வாங்க வேண்டும் என்று நினைக்க தொடங்கியுள்ளனர். அப்போது தான் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் அதிவேக இன்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர்.

வெறும் ரூ.9999 க்கு சூப்பர் 5G போன்.. விற்பனையும் ஆரம்பம்!

இந்த இடத்தில் தான், பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான பெரிய தேவை ஏற்படுகிறது. அதை பூர்த்தி செய்யும் நோக்கத்தின்கீழ்.. சீன நிறுவனங்களை கொஞ்சம் முந்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின்கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் - லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G)!

இந்த மாத தொடக்கத்தில் (நவம்பர் 2) இந்தியாவில் அறிமுகமான லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை, அறிவிக்கப்பட்டபடியே இன்று முதல் (நவம்பர் 9) தொடங்கியது. லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

வெறும் ரூ.9999 க்கு சூப்பர் 5G போன்.. விற்பனையும் ஆரம்பம்!

லாவா பிளேஸ் 2 5ஜி விலை மற்றும் விற்பனை: லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது (6ஜிபி+128ஜிபி அபிஷனின் விலை அறிவிக்கப்படவில்லை). இது கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில்.. லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வருகிறது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த போனிற்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும்.

வெறும் ரூ.9999 க்கு சூப்பர் 5G போன்.. விற்பனையும் ஆரம்பம்!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh rate) மற்றும் 720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டுள்ளது. இது செல்பீ கேமராவிற்கான ஹோல் பஞ்ச் கட்அவுட்டை கொண்ட 2.5டி கர்வ்டி டிஸ்பிளேவாகும்.

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் உடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை ரேம் ஆக கடன் வாங்கி, அதை மொத்தம் 12ஜிபி ஆக அதிகரிக்கவும் முடியும்.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதை 1டிபி வரை விரிவாக்கவும் முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷ் (LED Flash) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 0.08 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு (Screen Flash Support) உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா பார்த்துக்கொள்கிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ஓடிஜி, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

கடைசியாக லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (18W Fast Charging Support) 5000எம்ஏஎச் பேட்டரியை (5000mAh Battery) கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 164.2x76x8.45 மிமீ மற்றும் 203 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze 2 5G Sale Starts Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X