Home
Mobile

ஆளுக்கு 2 பார்சல்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. மலிவு விலையில் புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் விரைவில் லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே லாவா பிளேஸ் 2 4ஜி போன் இந்தியாவில் ரூ.8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் லாவா பிளேஸ் 2 5ஜி போனும் இந்தியாவில் விரைவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் டீசர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. பின்பு இந்த போனின் புகைப்படங்கள் கூட ஆன்லைனில் வெளியாகி உள்ளது. தற்போது லாவா பிளேஸ் 2 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆளுக்கு 2 பார்சல்.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் புதிய 5ஜி போன்..

அதாவது டிப்ஸ்டர் சுதன்ஷு அம்போர் தெரிவித்த தகவலின்படி, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எல்சிடி பேனல் (LCD panel) மற்றும் சென்டர் பஞ்ச்-ஹோல் (Center punch-hole) டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போன் அறிமுகமாகும்.

அதேபோல் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6020 பிராசஸர் (Dimensity 6020 processor) உடன் இந்த லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. குறிப்பாக இதில் 50எம்பி பிரைமரி கேமராவும் உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும்.

எனவே இந்த லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் ௧௮ வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ஆளுக்கு 2 பார்சல்.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் புதிய 5ஜி போன்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் குறைந்த எடையுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த லாவா பிளேஸ் 2 5ஜி போன் ரூ.9,000 அல்லது ரூ.10,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வரும் வாரங்களில் லாவா பிளேஸ் 2 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் லாவா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze 2 5G Price in India, specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X