அப்படி போடு: ரூ.11,999-விலையில் மீண்டும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்.!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5ஜி என்ற ஸ்மார்ட்போனை கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது லாவா நிறுவனம். இந்நிலையில் மீண்டும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். அதாவது தற்போது லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி (Lava Blaze 1X 5G) போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இந்த போன் கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி போன் தற்போது ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும்.

அதாவது லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2.5டி curved glass மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + விஜிஏ சென்சார் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான பிராசஸர் வசதி. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 207 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications