Home
Mobile

இந்திய நிறுவனம் மீண்டும் களமிறக்கும் ஒரு மிரட்டலான 5G போன்: இனி சீன நிறுவனங்களின் போன் எதுக்கு?

லாவா நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த 5ஜி போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5ஜி என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது லாவா நிறுவனம். இந்த போன் கம்மி விலையில் பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தன.

இந்நிலையில் லாவா நிறுவனம் இந்தியாவில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது லாவா நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் லாவா லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி (Lava Blaze 1X 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய நிறுவனம் மீண்டும் களமிறக்கும் ஒரு மிரட்டலான 5G போன்.!

அதாவது லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,2.5b curved glass மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான பிராசஸர் வசதி. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

குறிப்பாக லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

இந்திய நிறுவனம் மீண்டும் களமிறக்கும் ஒரு மிரட்டலான 5G போன்.!

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + விஜிஏ சென்சார் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்திய நிறுவனம் மீண்டும் களமிறக்கும் ஒரு மிரட்டலான 5G போன்.!

5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் சீன நிறுவனங்களின் போன்களுக்கு போட்டியாக கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் லாவா பிளேஸ் 1எக்ஸ் 5ஜி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Blaze 1X 5G Launching Soon in India: Specifications Officially Released : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X