Lava அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
லாவா நிறுவனம் புதிய லாவா ஆரா கர்வ் 5ஜி (Lava Aura Curve 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிரத்தியேகமாக ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, மீடியடெக் சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய லாவா 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லாவா ஆரா கர்வ் 5ஜி அம்சங்கள் (Lava Aura Curve 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1100 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1.07 பில்லியன் கலர் டெப்த், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த லாவா ஆரா கர்வ் 5ஜி போனின் பின்புறத்திலும் ஒரு சிறிய டிஸ்ப்ளே உள்ளது. அதில் பேட்டரி சார்ஜ் நிலை, ஒலியின் அளவு, எமோஜிகள், நோட்டிபிகேஷன்கள் மற்றும் பல தகவல்களைப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 எஸ்ஒசி (octa-core MediaTek Dimensity 7100 SoC) சிப்செட் உடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவம் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைகரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது.
50எம்பி சோனி IMX752 ரியர் கேமரா உடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதியுடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா ஆரா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஐஆர் பிளாஸ்டர், MIL-STD 810H இராணுவத் தரச் சான்றிதழ் மற்றும் IP64 ரேட்டிங் உடன் இந்த புதிய லாவா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லாவா ஆரா கர்வ் 5ஜி போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஹிம் சில்வர் மற்றும் அம்பர் ப்ளூ ஆகிய கலர்களில் வாங்க முடியும். தற்போது லாவா நிறுவனத்தின் ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய லாவா ஆரா கர்வ் 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது.
photo credit: 91mobiles, themobileindian


Click it and Unblock the Notifications
