அனைவருக்கும் பிடித்தமான விலையில் லாவா ஸ்மார்ட்போன்கள்!

Posted By:

அனைவருக்கும் பிடித்தமான விலையில் லாவா ஸ்மார்ட்போன்கள்!

மார்கெட்டில் என்ன புதிய ஸ்மார்ட்போன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்காக இதோ ஓர் புதிய செய்தி. சூப்பரான ஸ்மார்ட்போன்களை கொடுத்து பல வாடிக்கையாளர்களின் கைகளில் ஜொலித்து கொண்டிருக்கும் லாவா நிறுவனம், இன்னுமொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? லாவா அறிமுகம் செய்திருக்கும் ஐரிஷ் என்-350 என்ற புதிய ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றி சொல்ல வேண்டிய முதல் விஷயம் ஆன்ட்ராய்டு 2.3.6 இயங்குதளத்தில் இயங்கும் என்பது தான். இதில் 3.5 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்படும். இந்த திரையில் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம். 11.9 எம்எம் தடிமன் கொண்டதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கைக்கு கச்சிதமாக 115 கிராம் எடையினை வழங்கும். 2ஜி, எட்ஜ் மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகிய வசதிகளை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி வரை

மைக்ரோஎஸ்டி கார்டினை கொடுக்கும்.

இதில் வைபை மற்றும் ப்ளூடூத் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் பேட்டரியினை சிறப்பாக வழங்கும். லாவா ஐரிஷ் ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைத்தளத்தில் ரூ. 4,399 விலையினையும், ஸ்டோர்களில் ரூ. 5,499 விலையினையும் கொண்டதாக இருக்கும். இதை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்