இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

|

இம்மாதம் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 5ஜி சேவைகள் ஆனது இந்திய மக்களுக்கான தீபாவளி பரிசு என்று சொல்வதில் எந்த தவறுமே இல்லை.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களுமே (வியாபாரத்திற்காக மற்றும் சோதனைக்காக) 5ஜி என்கிற காட்டாற்று வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன!

பார்தி மிட்டல் மற்றும் அம்பானியின் வேலை முடிந்தது!

பார்தி மிட்டல் மற்றும் அம்பானியின் வேலை முடிந்தது!

பரந்த அளவிலான 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வது, மலிவான விலைக்கு 5ஜி திட்டங்களை வழங்குவதோடு, இந்தியடெலிகாம் நிறுவனங்களின் வேலை முடிந்து விட்டது.

அதை தொடர்ந்து கடுமையாக பணியாற்ற வேண்டியது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தான்!

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

இன்னொரு தீபாவளி பரிசு!

இன்னொரு தீபாவளி பரிசு!

ரூ.15,000 - ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்கள் ஆனது, கண்டிப்பாக பட்ஜெட் வாசிகளை ஈர்க்கப்போவதில்லை.இந்த இடத்தில் தான் இன்னொரு தீபாவளி பரிசு தேவைப்படுகிறது!

அதாவது சூப்பர் பட்ஜெட் விலையில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ரூ.10,000 குள் வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது!

அந்த தேவையை.. எந்த நிறுவனம் பூர்த்தி செய்யப்போகிறது?

அந்த தேவையை.. எந்த நிறுவனம் பூர்த்தி செய்யப்போகிறது?

இந்தியாவில் 5ஜி அறிமுகத்தை தொடர்ந்து, ரூ.10,000 குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக (தற்போது வரை) 2 நிறுவனங்கள் மட்டுமே அறிவித்துள்ளது!

அவைகள் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா மற்றும் சீன நிறுவனமான ரியல்மி ஆகும்!

Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் உள்ள மொத்த 5G போன்களும் இதோ!

லாவாவின் பட்ஜெட் விலை 5ஜி போன் எப்போது அறிமுகமாகும்?

லாவாவின் பட்ஜெட் விலை 5ஜி போன் எப்போது அறிமுகமாகும்?

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா இன்னும் சில வாரங்களில் Lave Blaze 5G என்று அழைக்கப்படும் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் முன்பதிவானது, தீபாவளி அன்று திறக்கப்படலாம்; அதை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000-க்குள் இருக்கும் என்பதையும் லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

லாவா பிளேஸ் 5ஜி போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

லாவா பிளேஸ் 5ஜி போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 5000mAh பேட்டரியையும் பேக் செய்யும்.

இது 1600×720 பிக்சல்ஸ் HD+ ரெசல்யூஷன், 90Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்ட 6.5-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

ஸ்டோரேஜ் & கேமராக்கள் எப்படி?

ஸ்டோரேஜ் & கேமராக்கள் எப்படி?

நீலம் மற்றும் பச்சை என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியாக உள்ள Lava Blaze 5G ஆனது 3GB அளவிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் 4GB RAM மற்றும் மெமரியை நீடிக்கக்கூடிய ஆதரவுடனான 128GB இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யும்.

கேமராக்களை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் AI ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும்.

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

லாவாவை தொடர்ந்து ரியல்மி!

லாவாவை தொடர்ந்து ரியல்மி!

லாவா நிறுவனத்தை தவிர, ரூ.10,000 க்குள் 5ஜி போன்களை வெளியிடுவதை உறுதிப்படுத்திய மற்றொரு பிராண்ட் - ரியல்மி ஆகும்.

ரெட்மி / சியோமி போன்ற நிறுவனங்கள் ரூ.10,000 க்குள்ளான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது போல் தெரிகிறது.

சமீபத்தில் அறிமுகமான Lava Blaze Pro!

சமீபத்தில் அறிமுகமான Lava Blaze Pro!

பட்ஜெட் விலை 5ஜி போனில் வேலை செய்து கொண்டிருக்கும் லாவா நிறுவனம், சமீபத்தில் Lava Blaze Pro என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

50 மெகாபிக்சல் AI ட்ரிபிள் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி, மீடியாடெக் G37 Octa-core ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இந்த ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.10,499 ஆகும்!

Best Mobiles in India

English summary
Lava and Realme to Launch Budget Price 5G Phones under Rs 10000 in India 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X