ஏர்டெல் & லாவா அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் லாவா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக லாவா இசெட்50 சாதனத்திற்கு ஏர்டெல் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இப்போது வெளிவந்துள்ள லாவா இசெட்50 ஸ்மார்ட்போனை வாங்குபோது வாடிக்கையாளர்கள் ஒருமுறை இலவசமாக மாற்றிக் கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இரண்டு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லாவா இசெட்50 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.4400-ஆக உள்ளது, ஆனால் ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் சலுகையின் படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.2,400-க்கு வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற வலைதங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

லாவா இசெட்50 :
லாவா இசெட்50 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
லாவா இசெட்50 ஸ்மார்ட்போனில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும் பொக்கே எஃபெக்ட்களை கொண்டுள்ளது.


2000எம்ஏஎச்:
லாவா இசெட்50 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications