அட்டகாசமான லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதி மற்றும் தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது இந்த லாவா அக்னி 5ஜி மாடலின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் வரும் நவம்பர் 18-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1080 × 2460 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரொ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர AI மோட், சூப்பர் நைட் மற்றும் ப்ரோ மோட்உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த புதிய லாவா அக்னி 5ஜி மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் சிம் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் டிஸ்பிளே மிக அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

லாவா அக்னி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சலுகையும் உள்ளது.


Click it and Unblock the Notifications